சுவடிகள் காப்புச் சொல்லியல்│ARCHIVE TERMINOLOGY

EnglishNorskதமிழ்Meaning │விளக்கம்
A
ArchiveArkivசுவடி,
ஆவணம்,
ஓலை
cuvaṭi, āvaṇam, ōlai
This term can refer to documents created by or received by an organisation as part of the organisational functionality´s task solution, case processing and administration.

இந்த சொல் ஒரு நிறுவன செயல்பாடுகளின் பணி தீர்வு, வழக்கு செயலாக்கம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட ஆவணங்கள்.
ArchiveArkivஆவணக்களம், ஆவணக்களரி
சுவடிக் குவையகம்
āvaṇakkaḷam, āvaṇakkaḷari, cuvaṭik kuvaiyakam
This term can refer to the archive service in an organisation.

இந்த சொல் ஒரு நிறுவனத்திற்குள் இருக்கும் ஆவணப்படுத்தல் சேவையைக் (ஆவணக்களம், ஆவணக்களரி) குறிக்கும்.
ArchiveArkivபதிவேடு / ஆவணம் பேணும் அறை
சுவடிக் குவையகம்
pativeṭu/ āvaṇam pēṇum aṟai, cuvaṭik kuvaiyakam
This term can refer to a room where archive documents are stored.

இந்த சொல் காப்பக ஆவணங்கள் சேமிக்கப்படும் ஒரு அறையை குறிக்கும்.
ArchiveArkivஆவணகம், ஆவணக்காப்பகம், சுவடிகள் காப்பகம்
āvaṇakam, āvaṇakkāppakam, cuvaṭikaḷ kāppakam
This term can refer to an archival institution.

இந்த சொல் ஒரு ஆவணக் காப்பக நிறுவனத்தைக் குறிக்கும்.
Archive (v)Arkivere (v)ஆவணக்காப்பு,
சுவடிக் காப்பு
āvaṇakkāppu, cuvaṭik kāppu
ArchivesArkivஆவணகச் சேகரம், 
ஆவணங்கள், சுவடிகள் சேகரம்,
சுவடிகள்
சுவடிக்குவை
āvaṇakac cēkaram, āvaṇaṅkaḷ, cuvaṭikaḷ cēkaram, cuvaṭikaḷ, cuvaṭikkuvai
Archive collectionArkiv samlingஆவணச் சேகரம், சுவடிச் சேகரம்
சுவடிக்குவை
சுவடித்திரட்டு
ஆவணத்திரட்டு
āvaṇak cēkaram, cuvaṭic cēkaram, cuvaṭikkuvai, cuvaṭittiraṭṭu, āvaṇattiraṭṭu
Archive depotArkiv depotஆவணக்காப்பகம், சுவடிகள் காப்பகம் āvaṇakkāppakam, cuvaṭikaḷ kāppakam),
Archival descriptionArkiv beskrivelseஆவண விவரிப்பு, சுவடி விவரிப்பு (சரியான தமிழ் சொல் தேடலில் உள்ளது
āvaṇa vivarippu, cuvaṭi vivarippu (cariyāṉa tamiḻ col tēṭalil uḷḷatu
“The creation of an accurate representation of a unit of description and its component parts, if any, by capturing, analyzing, organizing and recording information that serves to identify, manage, locate and explain archival materials and the context and records systems which produced it. This term also describes the products of the process” (ISAD glossary)
Archival institutionArkivinstitusjonஆவணக் காப்பக நிறுவனம், சுவடிகள் காப்பக நிறுவனம்
āvaṇak kāppaka niṟuvaṉam, cuvaṭikaḷ kāppaka niṟuvaṉam
“An organization which keeps and preserves archival material and makes it accessible to the public” (ISDIAH glossary). Archives have the main function to preserve materials. Libraries and museums have a secondary function to preserve archival materials. All these three repositories are either mainly or partly archive institutions.
ArchivingArkiveringஆவணக்காப்பகப்படுத்தல், சுவடிக் காப்பகப்படுத்தல் āvaṇakkāppakappaṭuttal, cuvaṭik kāppakappaṭuttal)
B
BlogBloggவலைப்பதிவு
valaippativu
A blog is a personal journal or diary published on the internet. It is usually run by an individual or a small group. Blogs vary in expression, design and intended audience from the simplest and most private considerations to serious journalistic publications.

வலைப்பதிவு (blog) என்பது இணையத்தில் வெளியிடப்படும் தனிப்பட்ட இதழ் அல்லது நாட்குறிப்பு. இது பொதுவாக ஒரு தனி நபர் அல்லது ஒரு சிறிய குழுவால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வலைப்பதிவுகளின் வெளிப்பாடு, வடிவமைப்பு மற்றும் இதன் பயனாளர்கள் வேறுபடும். அவை எளிமையான மற்றும் மிகவும் தனிப்பட்ட கருத்தில் இருந்து தீவிரமான பத்திரிகை வெளியீடுகள் வரை வேறுபடுகின்றன.
Business activity/ Functional activityVirksomhetசெயல்பாடு (சரியான தமிழ்ச் சொல் தேடலில் உள்ளது)
ceyalpāṭu (cariyāṉa tamiḻc col tēṭalil uḷḷatu)
Activities in a public body, an organization, company, institution and other, or within a person.
A public body, an organization, a company, an institution and other, or part of such an entity.

ஒரு பொது அமைப்பு (government body), ஒரு அமைப்பு, நிறுவனம், ஏனைய அல்லது ஒரு நபரின் செயல்பாடுகளைக் குறிக்கும்.
ஒரு பொது அமைப்பு (government body), ஒரு அமைப்பு, ஒரு நிறுவனம் அல்லது இது போன்ற ஓர் அலகு.
C
CatablogCatablogபெயர்ப்பட்டியல் வலைப்பதிவு
peyarppaṭṭiyal valaippativu
a weblog that provides access to cataloguing information about archival collections.

காப்பக சேகரிப்புகள் பற்றிய பட்டியல் தகவல்களுக்கான அணுக்கத்தை வழங்கும் வலைப்பதிவு.
CatalogueKatalogபெயர்ப்பட்டியல் வரிசை, நூற் பட்டியல், நூலடைவு
peyarppaṭṭiyal varicai, nūṟ paṭṭiyal, nūlaṭaivu
Community ArchivesFellesskapsarkiv (?)சமூகக்குழுச் சுவடிகள்
camūkakkuḻuc cuvaṭikaḷ
CopyrightOpphavsrettபதிப்புரிமை
patippurimai
D
DocumentationDokumentasjonஆவணம், பத்திரம்,
ஓலை
āvaṇam, pattiram, ōlai
The source document for such as rights, administrative transactions, history, culture, identity.

உரிமை, நிர்வாக பரிவர்த்தனை, வரலாறு, பண்பாடு, அடையாளம் போன்றவற்றிற்கான ஆதார மூலமாக இருக்கும் பதிவு (document).
DocumentDokumentபதிவு, ஏடு
pathivu, eedhu
Documents can be in analogue or digital form or physical objects. Different types of media that carry information are called by the collective term document (documents).

பதிவுகள் நேரிணை (analogue) அல்லது எண்ணிம (digital) வடிவத்தில் இருக்கலாம், அல்லது இயற்பியல் பொருட்களாக (physical objects) இருக்கலாம். தகவல்களைத் தாங்கிய பல்வேறு வகையான ஊடகங்கள் பதிவு (பதிவுகள்) என்ற கூட்டுச் சொற்கூறால் அழைக்கப்படுகிறன.
DocumentingDokumenteringஆவணப்படுத்தல், சுவடிப்படுத்தல்
aavanapadhuthal, cuvaṭippaṭuttal
F
Free licensefri lisensகட்டற்ற உரிமம்
kaṭṭaṟṟa urimam
FileFilகோப்பு
kōppu
FolderMappeகோப்புறை
kōppuṟai
H
HeritageArvமரபுரிமை
marapurimai
O
Open AccessÅpen tilgangதிறந்த அணுக்கம்
tiṟanta aṇukkam
Organisation archivesOrganisasjonsarkivநிறுவனச் சுவடிகள்,
நிறுவன ஆவணங்கள் niṟuvaṉac cuvaṭikaḷ, niṟuvaṉa āvaṇaṅkaḷ)
Organisation archives are created by an organisation. It is created, retained and managed by the archive service in that organisation.

நிறுவனச் சுவடிகள் ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அது அந்த நிறுவனத்தில் உள்ள ஆவணக்களத்தால் உருவாக்கப்பட்டு, பேணிப்பாதுகாக்கப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்பட்டிருக்கும்.
Orphaned WorksOpphavsrett løs arbeidஅனாதைப் படைப்புக்கள் (சரியான தமிழ்ச் சொல் தேடலில் உள்ளது)
aṉātaip paṭaippukkaḷ (cariyāṉa tamiḻc col tēṭalil uḷḷatu)
Works that have no one to claim copyright or patent for.

பதிப்புரிமை அல்லது காப்புரிமை கோருவதற்கு சட்டரீதியாக ஒருவரும் இல்லாத படைப்புகள்.
P
PatentPatentகாப்புரிமை
kāppurimai
Participatory ArchivesDeltagende arkivபங்கேற்புச் சுவடிகள்
paṅkēṟpuc cuvaṭikaḷ
Personal archivesPersonlig arkivதனிநபர் சுவடிகள், தனிநபர் ஆவணங்கள் taṉinapar cuvaṭikaḷ, taṉinapar āvaṇaṅkaḷPersonal archives are created by a person. It is created, retained and managed by the person.

தனிநபர் சுவடிகள் ஒரு நபரால் உருவாக்கப்படுகின்றன. இது அந்த நபரால் உருவாக்கப்பட்டு, பேணிப்பாதுகாக்கப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்பட்டிருக்கும்.
PrivacyPersonvernதனிமனித உரிமை, அகவுரிமை
taṉimaṉita urimai, akavurimai
PreserveBevareபேணிப்பாதுகாத்தல்
pēṇippātukāttal
Preservation repositoryBevaringsinstitusjon, bevaringssted, depotகாப்பகக் களஞ்சியம்
kāppakak kaḷañciyam
R
Recordarkivdokumentசுவடி, ஆவணம், ஓலை
cuvaṭi, āvaṇam, ōlai
Records are documents or information created or received by physical or legal persons (records creators) as part of their business.

ஆவணம்/ சுவடி/ ஓலை என்பது ஒரு இயற்பியல் (physical) அல்லது சட்டரீதியான நபர்களால் (legal persons) (பதிவுகளை உருவாக்குபவர்கள்) அவர்களின் நிர்வாக இயக்கத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பதிவு (documents) அல்லது தகவல் (information) ஆகும்.
Record-keepingArkiv danningபதிவேடு செய்தல்
pathiveedhu seithal
Record managementDokumentasjons-forvaltningபதிவு மேலாண்மை
pathiveedhu muhaamai
Rights researchRettighetsforskningஉரிமை ஆய்வு
urimai āyvu
Orphaned works that have no one to claim copyright or patent may be made public after rights research.

பதிப்புரிமை அல்லது காப்புரிமை கோருவதற்கு ஒருவரும் இல்லாத அனாதைப் படைப்புக்கள் உரிமை ஆய்வின் (after rights research) பின் பொதுவில் வெளியிடப்படலாம்.
V
VirtualVirtualமெய்நிகர்
meynikar

மேலதிகம்│More

உசாத்துணை │Bibliography

உருவாக்கம்│Creation: 23.01.2021
புதுப்பிப்பு│Update: 05.03.2023