பிரதான நீரோட்ட காப்பகங்களில் தமிழ் சுவடிகள் │TAMIL COLLECTIONS AT MAINSTREAM REPOSITORIES

ஆவணகம், அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் தமிழ் அவணச் சேகரிப்புகள்

உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆவணகம், அருங்காட்சியகம் மற்றும் நூலகங்களில் தமிழ் ஆவணச் சேகரிப்புகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த களஞ்சியங்கள் அந்த நாட்டு அரசு அல்லது தனியார் களஞ்சிய நிறுவனங்களாக இருக்கலாம். இந்த களஞ்சிய நிறுவனங்களில் உள்ள ஆவணச் சேகரிப்புகளின் பொது அணுக்கத்தின் அளவு வேறுபட்டு இருக்கலாம். அதாவது சில ஆவணச் சேகரிப்புகள் முழுப் பொது அணுக்கத்துடன் இருக்காலம். மற்றும் சில மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தில் இருக்கலாம்.

நீங்கள் அறிந்த ஆவணகம், அருங்காட்சியகம் மற்றும் நூலகங்களில் உள்ள தமிழ் அவணச் சேகரிப்புகள் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

TAMIL COLLECTIONS AT MAINSTREAM ARCHIVES, MUSEUMS AND LIBRARIES

There are Tamil collections preserved at different archives, libraries and museums around the world. These institutions can be either government or private institutions. The collections at these institutions can have varying access for the public.

Please let us know about any Tamil collections at archives, museums and libraries in your country.புலம்பெயர் │Diaspora

CEYLON (SRI LANKA) PROTO-HISTORY PROJECT COLLECTION


“இலங்கை புரோட்டோ-ஹிஸ்டரி (Proto-History) திட்டத் தொகுப்பில் வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகள், அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள், நிதிப் பதிவுகள், கலைக்கடன் கடன்கள், புலக் குறிப்புகள், கலைப்பொருள் பகுப்பாய்வு, ரேடியோ கார்பன் பகுப்பாய்வு, புகைப்பட அச்சிடுதல் மற்றும் எதிர்மறைகள், தளத் திட்டங்கள் மற்றும் பிரிவுகள், மற்றும் நாற்பத்தொன்று மட்பாண்டங்கள் உள்ளன.”
பென் அருங்காட்சியகம், பிலடெல்பியா, அமெரிக்கா.

“The Ceylon (Sri Lanka) Proto-History Project Collection includes budgets and proposals, reports and publications, financial records, artifact loans, field notes, artifact analysis, radiocarbon analysis, photographic prints and negatives, site plans and sections, and fourty-one pottery drawings.”
Penn Museum, Philadelphia, USA.The S. J. V. Chelvanayakam Fonds at the UTSC Library Archives

“பின்காலனிய இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக விளங்கிய சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் ஆவணகச் சேகர வெளியீட்டு விழாவாக இந்நிகழ்வு அமைகிறது. ஓர் அரசியற் தலைவராக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய செல்வநாயகத்தின் வாழ்வு 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளுக்குச் சாட்சியமாக விளங்குகிறது. செல்வநாயகத்தின் ஆவணங்கள் பெருமளவிலான கடிதத் தொடர்புகளையும் சிறுவெளியீடுகள் மற்றும் ஏனைய ஆவணங்களையும் கொண்டுள்ளன. இவை செல்வநாயகத்தின் மகளான சுசிலி செல்வநாயகம் வில்சனால் மிகச் சீரிய முறையில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ் ஆவணகச் சேகரம் சுசிலி செல்வநாயகம் வில்சன் மற்றும் செல்வநாயகத்தின் பேத்தியான மல்லிகா வில்சன் ஆகியோரால் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.”
ரொரண்டோ, கனடா

“The archive of S. J. V. Chelvanayakam, an extraordinarily significant political leader of the Tamil community in postcolonial Sri Lanka. As a leader, lawyer, and parliamentarian, Chelvanayakam’s life bears witness to significant political events in the island from the 1950s to the 1970s. His papers, consisting of voluminous correspondence, along with documents and pamphlets, were meticulously collected by Mr. Chelvanayakam’s daughter, Susili Chelvanayakam Wilson. The archive was then donated to the University of Toronto Scarborough Library by Susili Chelvanayakam Wilson and Mr. Chelvanayakam’s granddaughter, Malliha Wilson.”
Toronto, Canada.


Digital Dictionaries of South Asia


எண்ணிம தெற்காசியா நூலகம் (The Digital South Asia Library) அறிஞர்கள், பொது அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பிற பயனர்களுக்கு தெற்காசியா பற்றிய குறிப்பு மற்றும் ஆய்விற்கான எண்ணிம பொருட்களை வழங்குகிறது. இந்த திட்டம் Andrew W. Mellon அறக்கட்டளையின் ஆதரவுடனும், ஆய்வு நூலகங்களின் சங்கத்தின் உலகளாவிய வள திட்டத்தின் நிதியுதவியுடநும் இரண்டு வருட பரிட்சாத்தத் திட்டமாக உருவாக்கப்பட்டது.
சிகாகோ பல்கலைக்கழகம் (University of Chicago) மற்றும் ஆராய்ச்சி நூலகங்களுக்கான மையம் (Center for Research Libraries), மற்றும் எண்ணிம தெற்காசியா நூலகத்துடன் (Digital South Asia Library) நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா.

The Digital South Asia Library provides digital materials for reference and research on South Asia to scholars, public officials, business leaders, and other users. This program builds upon a two-year pilot project funded by the Association of Research Libraries’ Global Resources Program with support from the Andrew W. Mellon Foundation.
University of Chicago and the Center for Research Libraries, and closely affiliated with the Digital South Asia Library.
USAஈழம்│Sri Lanka (Eelam)


தமிழகம்│Tamil Nadu

உருவாக்கம்│Creation: 28.07.2020
புதுப்பிப்பு│Update: 30.08.2021