ஒரு நூல் திட்டத்தின் மூலம் தமிழ்-நோர்வேயிய உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதற்கான முயற்சி 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த முயற்சி படிப்படியாக புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்களாக (DiasporA Tamil Archives) பரிணமித்தது.
2018ம் ஆண்டு முதல் புலம்பெயர் தமிழ் சுவடிகள் காப்பகங்கள் நோர்வேயில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவர்களின் ஆலோசனை, வழிகாட்டல், ஆதரவு, ஒத்துழைப்புடன் தமிழ்-நோர்வேயிய புலம்பெயர் வரலாற்றையும், புலம்பெயர் தமிழர் வரலாறு மற்றும் பாரம்பரியத்தையும் கைப்பற்றவும், பாதுகாக்கவும், பேணிப் பாதுகாக்கவும், பரவலாக்கவும் பணி செய்து வருகின்றது.
சமூகப் பங்கேற்புக் காப்பகங்கள் (community and participatory archives) சமூக மட்டத்தில் உருவாகும் ஒரு கூட்டுச் செயல்பாடு ஆகும். இக்கூட்டுச் செயல்பாட்டை சாத்தியப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. இதை மேலும் பலப்படுத்த தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிமனித ஆளுமைகளுடன் இணைந்து பணிபுரிய நாம் ஆர்வமாக உள்ளோம்.
The initiative to document and disseminate Tamil-Norwegian local history through a book project started in 2017. The initiative gradually evolved to DiasporA Tamil Archives (DTA).
Since 2018, the DTA has been working with various organisations, institutions and individuals in Norway to carry out various projects. With their advice, guidance, support and cooperation, DTA has been working to capture, secure, preserve and disseminate Tamil-Norwegian diaspora history and Diaspora Tamil history and heritage.
Community and participatory archives are grass-root collaborative movements that develop in the community. Thanks to everyone who made this collaborative movement possible. We look forward to working with different organisations, institutions and individuals to further strengthen this process.
உருவாக்கம்│Creation: 17.10.2021
புதுப்பிப்பு│Update: 18.02.2022